புதருக்குள் ஆண் சடலம் கொலையா தற்கொலையா என காவல்துறை விசாரணை!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கொண்ட நாயக்கன்பட்டி யில் பட்டாளம்மன் கோவில் தெருவில் ஆண் சடலம் புதரில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர். சரவணகுமார் தலைமையில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் உடல் நிலை குறைவு ஏற்பட்டு இறந்தாரா தற்கொலை செய்து கொண்டாரா கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாரா என்று கோணங்களில் ஆண்டிபட்டி காவல்துறை தீவிர விசாரணை.
மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக