நத்தம் அருகே வத்திபட்டியில் புகையிலை விற்ற டீக் கடைக்கு சீல்!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சாபர்சாதிக் வத்திபட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டார்.அப்போது அந்த பகுதியில் உள்ள பொன்னையா என்பவருக்கு சொந்தமான  டீக்கடையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த 600 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரி ரூ.25 ஆயிரம்  அபாரதம் விதித்து கடைக்கு சீல் வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!