மணல் குவாரி திறப்பது அவசியம் – பொதுமக்களின் கோரிக்கை!


ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (ஜெய்) 09/11/25 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். அதில், தமிழ்நாட்டில் அரசு மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். மணல் பற்றாக்குறையால் “கலைஞர் கனவு இல்லத் திட்டம்” உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், M-Sand உற்பத்தி அதிக எரிபொருள், மின்சாரம் தேவைப்படுவதால் காற்று மாசு மற்றும் நோய்கள் அதிகரிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

மணல் குவாரி மூடப்பட்டதால் 25 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக குவாரிகளைத் திறக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!