கோபால்பட்டியில் கிணற்றில் சிறுமி சடலமாக மீட்பு!!

திண்டுக்கல் மாவட்டம் , சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டி-இந்திரா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி உமாபதியின் 14 வயது மகள் ஜெயஸ்ரீ, ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியபோது, வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் சிறுமியின் உடல் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். தகவலறிந்த சாணார்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி, உடற்கூற் ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்த ஜெயஸ்ரீயின் மரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!