சௌசௌ விலை சரிவு விவசாயிகள் கவலை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புறநகர் கிராமங்களில் சௌசௌ காய்களின் விலை சரிந்து மூட்டைக்கு வெறும் 60 முதல் 100 ரூபாய் லாபம் மட்டுமே கிடைப்பதால் காய்கறி வயலிலேயே உரமாக தூக்கியெரிகின்றனர். விதை வண்டி வாடகை கமிஷன் கூலி எல்லாம் போக ஒரு சாக்குக்கு 100 ரூபாய் மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் வருத்தம் மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசு துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். விதைகள் உரம் மானியத்தில் கிடைத்தால் நன்மை பயக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக