ரயிலில் தவறவிட்ட திருமண பொருள் ஆர்.பி.எப் அதிகாரி பத்திரமாக மீட்பு!!
சென்னையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வின்சென்ட் எனும் ஒருவர் அவரது மகள் திருமணத்திற்கான பத்திரிக்கைகளை எடுத்து கொண்டு உறவினர்களுக்கு கொடுப்பதற்கு சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் பயணம் செய்தார் திருவள்ளுர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தபோது அங்கு இறங்கியவர் கொண்டு வந்த இரண்டு பைகளில் ஒன்றை ரயில்பெட்டியில் தவறவிட்டதை உணர்ந்தார் உடனே வை எடுப்பதற்கு முயற்சித்தபோது மின்சார ரயில் புறப்பட்டு விட்டது உடனே அரக்கோணம் ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்பு படை ஆர்பி எப் அதிகாரி நண்பர் மகராஜனுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த மகராஜன் அரக்கோணம் வந்த ரயிலில் ஏறி வின்சென்ட் தவற விட்ட பையினை மீட்டார் அதில் ரு 8 ஆயிரம் பணமும், பட்டுபுடவை மற்றும் திருமண பத்திரிக்கைகள் பத்திரமாக இருந்ததை உறுதி செய்து கொண்டார் இது தொடர்பாக வின்செண்ட்டிற்கு தகவல் தெரிவித்தார் கைவிட்டு போன பொருட்களை பத்திரமாக மகராஜன்.மீட்டு தந்த உயர்ந்த சேவைக்கு மகராஜனுக்கு நெஞ்சார்ந்த நன்ற தெரிவித்து கொண்டார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக