விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்!!

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கான விழிப்புணர் கூட்டம் விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் வெளியூர் பயணிகளிடம் அடாவடி செய்து பயணிகளிடமிருந்து பணம் பிடுங்குவதாகவும், தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததின் பேரில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிவுறுத்துதலின் பேரில் னனபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளமுருகன் அவர்களின் தலைமையில்
இன்று தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் திருநங்கைகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
திருநங்கைகள் இரவு நேரங்களில் சுற்றி திரிவது, வெளியூர் பயணிகளிடம் பணம் பிடுங்கி செல்வது, வேறு வித செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும். தாங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள சிறு தொழில்கள் செய்ய முயலவேண்டும் என்றும்.
னவெளியூர் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் திருநங்கைகள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள சிறு தொழில்கள் மேற்கொள்ள அரசு கடன் உதவிகள் செய்து வருவது பற்றியும் விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.
இதனை அடுத்து திருநங்கைகள் பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேவையில்லாத செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி அளித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள்பங்கேற்றனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். செல்வநாயகம் உடன் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.
கருத்துகள்
கருத்துரையிடுக