நத்தத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டார வள மைய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு நத்தம் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் பாத்திமா தலைமை தாங்கினார். சாணார்பட்டி வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் நத்தம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் சின்ன இளங்கான் தலைமையில் மருத்துவர்கள் சதீஸ்குமார், பிரவீண் உள்ளிட்ட டாக்டர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறன் குறித்த மதிப்பீடு செய்தனர். இதில் பிறப்பு முதல் 18 வயது வரை சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளுக்கு மதிப்பீடு செய்தனர். இதன் மூலம் அதற்கான அடையாள அட்டைகள், உதவி உபகரணங்கள், பஸ் மற்றும் ரயில் பாஸ், அறுவை சிகிச்சை பெறுவதற்கு வழி வகை செய்யும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இதில் நத்தம் மற்றும் ஒன்றியங்களைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்டனர். சிறப்பு பயிற்றுநர் அம்புரோஸ் நன்றி கூறினார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக