நத்தத்தில் இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாசில் சிறை!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நேரு நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (25). இவர் தனியார் பேருந்துகளை கழுவி சுத்தம் செய்யும் பணி செய்து வருபவர். இவரை நத்தத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (22), யாசர் அராபத் (23) ஆகிய இருவரும் சேர்ந்து நத்தம் கோவில்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோ எடுத்து இளைராஜாவிற்கு அனுப்பி வைத்தனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டிய வழக்கில் அப்துல் ரகுமான் (22) என்பவரை கைது செய்த போலீஸார் திண்டுக்கல் மாவட்டச் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அப்துல் ரகுமானை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நத்தம் காவல் ஆய்வாளர். சிவராமகிருஷ்ணன் திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்த அப்துல் ரகுமானை மதுரை மத்திய சிறையில் கொண்டு போய்  அடைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

படவிளக்கம் : அப்துல் ரகுமான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!