"எஸ்.ஐ.ஆர்.திட்டப்பணிகளை நாங்கள் எதிர்க்க வில்லை" அமைச்சர். ரகுபதி தகவல்!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே லெ.விலக்கிற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கனிம வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி;
நிருபர்களிடம் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர்.திட்டப்பணிகளை நாங்கள் ஒரு போதும் எதிர்க்க வில்லை. அதனை நிறைவேற்ற போதிய கால அவகாசம் வேண்டும் . என்கிறோம்.
அவசரகதியில் இதை நிறைவேற்றினால் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இப்பணியின் அவசரகதியால் மன அழுத்தம் ஏற்பட்டு இதுவரை3 பிஎல்ஓ க்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.உண்மையான.ஒரு வாக்காளரின் ஓட்டு கூட விடுபடக்கூடாது. எனவே இதனை தேர்தல்கமிஷன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப்பின் நடைமுறைப்படுத்தலாம். இது தான் எங்கள் விருப்பம். இது தான் எங் கள் நிலைப்பாடு. லட்சியம்.ஏனென்றால்
சராசரியாக ஒரு தொகுதியில். 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாங்கள் என்றும் மக்களுடன் இருக்கிறோம். அதனால். கவலையில்லை.
அதனை நிறைவேற்ற போதிய அவகாசம் வேண்டும்.எனவே இதனை தேர்தலுக்குப்பின் நடைமுறைப்படுத்தலாம். இது தான் எங்கள் விருப்பம். நிலைப்பாடு.
சராசரியாக ஒரு தொகுதியில. 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களிடம் தகவலை குறுகிய காலத்தில் பெறுவது இயலாத காரியம்.எஸ்.ஐ.ஆரை.க் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது. நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். இது மக்கள் அரசு..மத்திய அரசு கவர்னரை வைத்து மாநில அரசின் உரிமைகளை பறிக்க நினைக்கிறது.தமிழகத்தில் மதுரை,கோவை போன்ற மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு முறையாக விண்ணப்பித்தோம். ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு குறைந்த பட்சம் 20 லட்சம் மக்கள். தொகை வேண்டும் என கூறி நிராகரித்துவிட்டனர். அதே சமயம் இதைவிட குறைந்த மக்கள் தொகையுள்ள போபால்,ஆக்ரா,நாக்பூர் உள்ளிட்ட4 நகரங்களை மத்திய அரசு மெட்ரோ திட்டத்தில் சேர்த்துள்ளது. இதன் மூலம் தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. டிஜிபி நியமனத்தில் அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பாஜ ஆளும் உ..பியில் ஐந்து கூடுதல் டிஜிபிக்கள் உள்ளனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாதா. சட்டம். ஒழுங்கைப் பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது. அவர் முதல் வராக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பேட்டியளித்தார். ஆனால் நம் அரசில் சம்பவம் நடந்தால் முதல்வர் இரும்புக்கரம் கொண்டு உடனே நடவடிக்கைகள் எடுக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் ஊது குழலாக இபிஎஸ் செயல்படுகிறார். இவ்வாறு அமைச்சர். ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக