ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கேரளா மாநிலத்தின் அமீபா மூளை காய்ச்சலால் 36 பேர் இறந்து விட்டனர். குளம் குட்டை தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் ஒருவகை அமீபா இருப்பதால் வாய் மூக்கு வழியாக சென்று மூளை காய்ச்சலை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது குளம் ஆறுகளில் குளிக்கும்போது மூக்கு வாயை மூடி குளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பக்தர்களுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையை அணுகுமாறு வலியுறுத்தப்படுகிறது.
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக