தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!


பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் பெயர் பட்டியலின் விவரங்களை 19 தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர்கள் ,

முதன்மை கல்வி அலுவலர்கள், உயர்நிலை மேல்நிலை ,தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கான மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது இதனால் அனைத்து மேல்நிலை உயர்நிலை பள்ளிகளுக்கான பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் வலைத்தளத்தில் தங்களுக்கு வழங்கிய பயணக்குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து திருத்தங்கள் இருந்தால் அவற்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணியை தலைமையாசிரியர்கள் தங்களது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!