வீடு வீடாக சென்று வாக்காளர் படிவைத்தினை வழங்கி ஆய்வு செய்த கலெக்டர்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் வாக்குச்சாவடி நிலையை அலுவலர் மூலமாக வீடு வீடாகச் சென்று வாக்காளர் படிவத்தினை வழங்கி வருகின்றனர் இந்த நிலையில் ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட "கெல்லீஸ் சாலையில்" அமைந்துள்ள வீடுகளில் மாவட்ட ஆட்சியர்  சந்திரகலா 2-வது நாளாக வீடு வீடாகச் சென்று வாக்காளர் படிவத்தினை வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்  பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து வாக்காளர் பட்டியல் 2026 சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதால் நேற்று 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தினை விநியோகிக்க உள்ளனர். வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்து எவ்வித சான்றுகளும் இணைக்காமல் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை மட்டும் சமர்ப்பிக்குமாறு அறிவுரை வழங்கியதோடு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் படிவுத்தினை வழங்கி ஆலோசனை செய்தார்.

இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர். ராஜ் , வாலாஜா வட்டாட்சியர். ஆனந்தன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் , அரசு அதிகாரிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!