புதுகை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுகை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் உலக சுகாதார மையம் மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு இணைந்து இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த பேண்டிங் என்ற விஞ்ஞானி பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதியை உலகமெங்கும் உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட் டி மருத்துவமனை வளாகத்தில், மக்களின் ஆரோக்கியத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நீரிழிவு நோயைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தவும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இருதய நோய் சிறப்பு மருத்துவர். வெங்கடேசன், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர். அனிதா தனசேகரன், அவசர மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர். கோகுல் பிரசாத் மற்றும் இருக்கை மருத்துவர். தர்மராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர். கே.ஹெச்.சலீம் அனைவரையும் வரவேற்று பேசியதாவது: சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு அறிக்கையின்படி உலகளவில் 58.9 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கால சூழலில் 10 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. தற்போது இந்தியாவில் 10.1 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 25 வருடங்களில் 13.40 கோடியாக உயருவதற்கான வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலகசுகாதார மையத்தால் இந்த 2025 வருடவிழிப்புணர்வாக "வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நீரிழிவு" என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளைத் தடுக்கவும் இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் உலகளவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் உணவுக் கண்காட்சி மற்றும் சர்க்கரை நோயின் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு மக்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. உணவுக் கண்காட்சி ஏற்பாடுகளை உணவியல் மக்கள் தொடர்பு அலுவலர் நிபுணர். மகாலெட்சுமி செய்திருந்தார். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி தினேஷ், காளிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். மருத்துவமனையின் மேலாளர். சத்தியசீலன் நன்றியுரை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக