அரசியலமைப்பு நாள் உறுதி மொழியேற்பு!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 26, அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் வீ.லோகநாதன், முதுகலை ஆசிரியர்கள் திரு.குமார், திரு.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு வரலாறு பற்றியும் , அண்ணல் அம்பேத்கரின் சட்ட பணிகள் குறித்தும்,இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

அரசியலமைப்பு நாள் உறுதி மொழியை பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ வாசிக்க ஆசிரியர்களும், மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர்  சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், ஆசிரியர் செயலர் இரத்ன பிரகாஷ், 

ஆசிரியர்  ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!