ஆன்லைன் வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்!


தேனி மாவட்டம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் காமராஜர் நகர் முத்து தேவன்பட்டி பள்ளியைச் சேர்ந்த ஜி. ஹரிபாலா எட்டாம் வகுப்பு மற்றும் எஸ். சையது முகமது நூருல்லாஹ்எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மண்டல இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள். பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வினாடி வினா போட்டி என்பது இணையத்தின் வழியாக நடைபெறும் அறிவு மற்றும் திறனை சோதிக்கும் போட்டியாகவும் இது மாணவர்கள் பலவிதமான தலைப்புகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க உதவுகிறது மேலும் கற்றலை சுவாரசியமாக ஆக்குகிறது. இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி உறவின்முறை பெரியோர்கள் ,பள்ளி செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் முதல்வர் துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!