ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்!



தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பள்ளி மாணவர்கள் ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற தமிழகம் வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு தமிழகத்தில் ஐஸ் கட்டிங் பயிற்சி தளம் இல்லாமலேயே பேஸ் பால் பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நவம்பர் 7 8 9 தேதிகளில் ஐஸ் ஸ்கேட்டிங் தேசிய அளவிலான போட்டியில் நமது தமிழக அணி 10 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடத்தையும் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று தங்கம் வெள்ளி பதக்கங்களை பெற்று தமிழகத்தை பெருமைப்படுத்தி உள்ளார்கள் .ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் தமிழகத்தில் எங்குமே கிடையாது இந்த சூழ்நிலையில் பேஸ் பால் கிரவுண்டில் ஸ்கேட்டிங் ஷூ அணிந்து ஹாக்கி பேட்  வைத்து பயிற்சி செய்து ஐஸ் இல்லாமல் பயிற்சி செய்து,( டேராடூனில் மட்டுமே ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் உள்ளது ) இந்த விளையாட்டுக்கான வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் மென்மேலும் விளையாட்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்மேலும் ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி கொடுத்தால் ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்று பயிற்சியாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!