சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை அறநிலையத்துறையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து நத்தத்தில் ஆர்ப்பாட்டம்!!

 திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை இடித்து விட்டு புதிதாக கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் இருதரப்பினராக செயல்படுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஒரு தரப்பினர் இந்து சமய அறநிலையத்துறையில் கோயிலை சேர்க்க கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் அறநிலையத்துறையில் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தி  நேற்று செவ்வாய்க்கிழமை  காலை நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சிறுகுடி கோயில் மீட்பு குழு தலைவர் ஆசை அலங்காரம், பாரதிய ஜனதா மாநில பொது செயலர் ராம.சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க வினரும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!