கடலூர்: செம்மண்டலம் பகுதியில் ரூபாய். 9 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!
கடலூர் மாவட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம் பகுதியில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கும் பணிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று (12.11.2025) அடிக்கல் நாட்டி வைத்தார்.
உடன் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர். பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர். ம.சிந்தனைச்செல்வன், மாநகராட்சி மேயர். சுந்தரிராஜா, துணைமேயர். பா.தாமரைச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக