பாரத சாரண அமைப்பின் 75வது ஆண்டு வைரவிழா! பயிற்சி முகாமில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாரத சாரண சாரணிய அமைப்பின் வைரவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.  பாரத சாரண சாரணீய அமைப்பின் 75வது ஆண்டு வைரவிழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜம்போரி  என்ற பயிற்சி முகாம்  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் “அதிகாரம் பெற்ற இளைஞர்கள், வளர்ந்த இந்தியா”  என்ற தலைப்பில் கருத்தரங்கம், விவாத அரங்கம் மற்றும்  மாணவப் பருவத்திலேயே  சேவை மனப்பான்மையை  வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்த சொற்பொழிவுகள், உடற்பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முகாமில் பள்ளியின் பாரத சாரணர் மாணவர் அமைப்பினைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள்.      செ. லிங்கேஸ்வரன், கி.பாலமுருகன ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி பெற்று வந்தனர். பாரத சாரண அமைப்பின் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பள்ளியின் இயக்குனர். ரா. சுதர்சன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!