விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் 58 ம் கிராம பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடக் கோரி மாமல்லபுரத்தில் 28 .10 .2025 அன்று நடைபெற்ற வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர்.  துரை முருகன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு 29 10 25 அன்று 58 கிராம பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

முத்தமிழ் அறிஞர் கலைஞர்.மு. கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்டது. 58 ஆம் கால்வாய். இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. என்பதால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்படும் என்றும். மாண்புமிகு முதலமைச்சர். மு. க. .ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்த 4 மணி நேரத்தில் 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்ததற்கு உசிலம்பட்டி மக்கள் சார்பாக தேனி சட்டமன்ற தொகுதி எம்.பி. தங்கத் தமிழ்ச்செல்வன் அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். .அணையின் 67 அடியை மாண்புமிகு முதலமைச்சர் இடம் 58 ஆம் கால்வாய் பாசன விவசாயிகள் அனைவரும் சென்று நேரில் சந்தித்து பேசி தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அணையின் 67 அடியை குறைக்க விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து 67 அடியை குறைத்து அணையை நிரந்தரமாக திறக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!