திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் மாரத்தான் போட்டி ஏராளமான பங்கேற்பு!!

திமுக இளைஞரணி தலைவரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடும் விதமாக வடலூர் துவங்கி குறிஞ்சிப்பாடி வரை மாரத்தான் போட்டி நடத்தபட்டது.

இந்த மாரத்தன் போட்டியினை குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் முன்னிலையில், கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர். எம்.ஆர்.கே.பி.கதிரவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

வடலூர் சத்திய ஞான சபை திடலில் இருந்து மாரத்தான் போட்டியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர் என ஏராளமானோர் கலந்து கொண்டு வடலூர் துவங்கி குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையம்  வந்தடைந்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் கடலூர் பகுதியினை சார்ந்த ஐந்து பேர், முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை வென்றனர்.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் பாராட்டு சான்றிதழ்கள், பரிசு தொகைகள்மற்றும் கேடயங்களையும் வழங்கினார்.

மேலும் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கபட்டது.இந்த பிறந்தநாள் விழாவில் வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தன.தமிழ்ச்செல்வன், திமுக பொதுகுழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் வடலூர், குறிஞ்சிப்பாடி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!