நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு ஒருவர் வீதம், 47 ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் நியமனம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத முன்னெடுப்பான, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்கும் விதமாக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரு பிரதிநிதி வீதம் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் நியமன முறை மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும், என்ற அரசாணையின் அடிப்படையில்!…
நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 47 ஊராட்சிகளிலும், ஒருவர் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான நியமன ஆணையை, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் வழங்கினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக