திருமயம் அருகே நிலம் இல்லாத பெண்ணின் வங்கி கணக்கிற்கு பயிர் காப்பீட்டு தொகை ரூபாய். 40 ஆயிரம் வரவு!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகாவில் நிலமே இல்லாத பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ40 ஆயிரம் வரவாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் பிச்சையம்மாள் திருமயம் இன்ஸ்பெக்டரிடம் நேற்று புகார் செய்தார். அதில் என் பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ள விஏஓ,,இசேவை மைய உதவியாளர். உட்பட 3 பேர் மீது நடவடிக்கைகள் எடுக்கக்கோரியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக