350 டன் எடையுள்ள ராட்சத கருங்கலில்33 அடி உயரத்தில் 1008 லிங்கங்களை கொண்ட சகஸ்ர லிங்கம்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர், சி லோகநாதன் ஸ்தபதி வயது 65, 45 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த சிற்ப கலைஞரான இவர் மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலை கல்லூரியில் பட்டம் பெற்ற சிற்பி ஆவார் இவரிடம் பீகார் மாநிலம் பாட்னா நகருக்கு அருகில் உள்ள கிழக்கு சம்பாரண் என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக 18 லிங்கங்களுடன் கூடிய 33 அடி உயர சகஸ்ர லிங்கம் கருங்கல்லில் வடிவமைக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்குவாரியிலிருந்து 350 டன் எடையுள்ள ராட்சத கருங்கல் கொண்டுவரப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சகஸ்ர லிங்கம் வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
3 ஆண்டுகளில் ஸ்தபதி சி.லோகநாதன் தலைமையில் இரவு பகலாக 30 சிற்பிகளை கொண்டு 210 டன் எடையில் செதுக்கி 100 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 33 அடி உயரத்தில் அழகுற காட்சி அளிக்கும் சகஸ்ர லிங்கத்தில் மேல் புறத்தில் 72 லிங்கங்கள் வீதம் 14 அடுக்குகளில் 1008 சிறிய லிங்கங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது உலகத்திலேயே 350 டன் கல்லில் செதுக்கி 33 அடி உயரத்தில் 1008 லிங்கங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பிரம்மாண்டமான சகஸ்ர லிங்கம் இதுவே ஆகும்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி



கருத்துகள்
கருத்துரையிடுக