தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீடித்த நீர் மேலாண்மை தலைப்பில் 34 ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு!!

 வேலூர் மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய கணித அறிவியல் நிறுவனம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து  நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு இன்று 20.11.2025 காலை 9.30 மணி முதல் பிற் பகல் 4 மணிவரை காட்பாடி அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில்  நடை பெற்றது  இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர்  பே.அமுதா தலைமை தாங்கி னார். முன்னதாக மாவட்ட செயலாளர். செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.தாரகேஸ்வரி முன்னிலை வகித்து பேசினார். வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். ஆர்.பிரேமலதா அவர்க ளின் வாழ்த்துக்களுடன் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) பெ.செந்தில்குமார் தொடக்கிவைத்தும் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க வந்த  மாணவர்களை  பாராட்டியும் பேசினார். 

   

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி சிறப்புரையாற்றினர்.  மாவட்ட துணைத்தலைவர்கள். கே.விஸ்ஸ வநாதன், ஆர்.காயத்ரி, துளிர் வினாடி வினா ஒருங்கிணைப்பாளர். முத்து சிலுப்பன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர். ப.ராஜேந்திரன், இணை செயலாளர்கள். எ.பாஸ்கரன் என்.கோட் டீஸ்வரி, பி.ரவீந்திரன், காட்பாடி ஒன்றிய கிளையின் தலைவர் ஆர்.சுதாகர், செய லாளர். ஆர்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். குழந்தைகள் அறிவி யல் மாநாட்டின் அறிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். இல.சீனிவாசன், சமர்பித்து பேசினார். இவ்வாண்டிற்கான மையக்கருத்து நீடித்த நிலையான நீர் மேலாண்மை (நீர் கல்வி) இக் கருத்தை சார்ந்த உப தலைப்புகளில் பள்ளிக் குழந் தைகள் வழிகாட்டி ஆசிரியரின் மேற்பார் வையில் ஆய்வுகளை மேற்கொண்டு மாவட்டம் முழுமையாக 55 ஆய்வறிக் கைகள் சமர்பிக்கப்பட்டன.  120 மாணவ மாணவிகள் வழிகாட்டி ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.  டி.கே.எம் மகளிர் கல்லூரி பேராசிரியை. என்.ஜபீனாபேகம், அகீம் கல்லூரி பேராசிரியர். எ.யுபைதுல் பைக், ஆக்ஸிலியம் கல்லூரி பேராசிரியர். எஸ்.திவ்யா, திருவண்ணாமலை சண்முக தொழிற்சாலை கல்லூரி பேராசிரியர். எ.தினேஷ்கார்த்திக், ஊரிசு கல்லூரி பேராசிரியர். எம்.ஜாப் கோபிநாத், டாக்டர். எம்.ஜி.ஆர்.சொக்கலிங்கம் கல்லூரி பேராசிரியர் ஆர்.செந்தில்குமார் ஆகி யோர் ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு செய்து மண்டல போட்டிக்கு 7 கட்டுரை களை தேந்தெடுத்தனர்.  

இளநிலை பிரிவு (6முதல் 8ஆம் வகுப்பு)

1.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டியம்மன் கோயில் தெரு, தோட்டப் பாளையம், வேலூர 2.பேர்ணாம்பட்டு நுஸ்ரத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி

3.சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி

முதுநிலை பிரிவு (9 முதல் 12ஆம் வகுப்பு) 

1.ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,

2.காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,3.வேலூர் என்கேஎம் சாய்நாதபுரம் அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளி

4.பேர்ணாம்பட்டு நுஸ்ரத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி மண்டல அளவில் வடக்கு மண்டல அறிவியல் மாநாடு 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை இராணிப் பேட்டை மாவட்டம் அன்னை மீரா பொறி யியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

முடிவில் காட்பாடி கிளையின் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!