கடலூரில் நடைபெற்ற தேசிய முந்திரி தினத்தை முன்னிட்டு முந்திரி இயந்திர கண்காட்சி -25 மற்றும் உலக சாதனை நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரில் தேசிய முந்திரி தினத்தைமுன்னிட்டு முந்திரி இயந்திரக் கண்காட்சி'25, மற்றும் உலகசாதனை நிகழ்ச்சி நாளை , நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் & ஏற்றுமதியாளர்கள் சங்கம்சார்பில் தேசிய முந்திரி தினத்தை முன்னிட்டு காடாம்புலியூர் AV மஹால் திருமண மண்டபத்தில் முந்திரி இயந்திரக் கண்காட்சி'25, மற்றும் உலக சாதனை நிகழ்ச்சி ஆகியவை நாளை 23ஆம் தேதி,நாளை மறுநாள் 24 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.
முந்திரி சங்கத்தின் முக்கிய சாதனைகள், அதன் தொலைநோக்கு மற்றும் எதிர்காலத் திட்டம் மற்றும் முந்திரித் தொழிலை மேலும் வலுப்படுத்துவதற்கான நோக்கம் ஆகியவற்றைக் காட்டும் *Voice of TNCPEA* புத்தகவெளியீடு,
23 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான முந்திரி கொட்டைகளை 100 பெண் தொழிலாளர்கள் உடைக்கும் ஒரு சிறப்பு உலக சாதனை முயற்சி,முந்திரி தொழில் மேம்பாட்டு முயற்சிகளை ஊக்குவிக்கமுன்னணி இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய பிரமாண்டமான முந்திரி இயந்திர கண்காட்சி 2025 , கடந்த ஆண்டு சங்கத்தின் மூலம் வழங்கிய முந்திரி மரக்கன்றுகளை வெற்றிகரமாக வளர்த்த விவசாயிகளுக்கு மானியங்களை விநியோகித்தல், பண்ருட்டி முந்திரித் தொழிலுக்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்த 5 முன்னோடி உறுப்பினர்களை அங்கீகரித்து அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குதல்ஆகியவை நடக்கிறது.
விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்திய செந்தில் குமார் IAS, சென்னை APEDA துணை பொது மேலாளர். ஷோபனா குமார், கடலூர் வேளாண் துணை இயக்குநர். பூங்கோதை,கடலூர் மாவட்டத் தொழில் மையம் பொது மேலாளர். விஜயகுமார்ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டுசிறப்பிக்கின்றனர்.விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர். மலர்வாசகம், செயலாளர். ராமகிருஷ்ணன், பொருளாளர். செல்வமணி மற்றும் விழா குழுவினர் சங்க நிர்வாகிகள்சிறப்பாக செய்து வருகின்றனர்.விழாவை முன்னிட்டு பிரமாண்டமான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக