இலுப்பூர் : மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற 22 ஆம் ஆண்டு விளையாட்டு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் மேட்டுசாலையில் உள்மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா 2025–2026 சிறப்பாக உற்சாகமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக இலுப்பூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருமதி M.A. திவ்யா, அவர்கள் கலந்து கொண்டு புறாக்களை வானில் பறக்க விட்டுவிளையாட்டு போட்டிகளைத் ஆரம்பித்து வைத்தார்கள்.
Sports Spectra 2025–26 நிகழ்வில் தலைமை விருந்தினராக உரையாற்றிய திருமதி திவ்யா அவர்கள் மாணவர்கள் மொபைல் பயன்படுத்தும்போது ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பதைவலியுறுத்தினார்.மாணவர்களின் பாதுகாப்பு, சுய முன்னெச்சரிக்கை நடைமுறைகள்.
ஆசிரியர்–மாணவர் உறவு :
மாணவர்கள் பொறுப்புடன் நடந்து, பாதுகாப்பாக வளர வேண்டும் என அவர் கூறினார்.பள்ளியின் நிறுவனர் முனைவர். இரா. சின்னத்தம்பி தாளாளர். R.C. உதயகுமார் இயக்குனர் திருமா. பூங்குன்றன் மற்றும் பதிவாளர் பேராசிரியர். மு. தினேஷ்குமார் ஆகியோர் விழாவை முன்னிலை வகித்து, மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.
பள்ளி முதல்வர். ராஜகயல்விழி வரவேற்புரை ஆற்றி,சிறப்பு விருந்தினரை சிறப்பாக அறிமுகப்படுத்தினார்.
நிகழ்வில் மாணவர்கள் வழங்கிய அணிவகுப்பு, வண்ணமயமான ட்ரில் பயிற்சிகள் மேலும் பல்துறை தடகள போட்டிகள் அனைவரையும் கவர்ந்தன. பெற்றோர் விளையாட்டுப் போட்டிகளும் ஆர்வத்துடன் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.22ஆம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், விளையாட்டு திறனையும், ஒற்றுமை மனப்பான்மையையும் வெளிப்படுத்திய சிறப்பான விழாவாக அமைந்தது.
விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர். மகேந்திரன் தலைமையிலான ஆசிரியர்கள் குழு செய்திருந்தது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக