சோளிங்கர் அருகே ரயில்வே பணி காரணமாக அரசு விதிகளை மீறி சுமார் 20 அடி ஆழத்திற்கும் மேல் ஏரியில் மண் அல்லும் அபாயம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுக்கா கொடைக்கல் மோட்டூர் அருகே ஏரியில் ரயில்வே பணி காரணமாக ஏரி மண் லாரி லாரியாக எடுத்து செல்கின்றனர். அரசு விதிகளை மீறி சுமார் 20 அடி ஆழத்திற்கும் மேல் ஏரி மண் எடுத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதி மரண கிணறு போல் காட்சியளிக்கின்றது.
ஆகவே அந்தப் பள்ளத்தினால் பொது மக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடத்தினை ஆய்வு செய்து மண் எடுக்கும் நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது?
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.




கருத்துகள்
கருத்துரையிடுக