தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு!!


ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இத்தேர்வு காவல்துறை துணைத் தலைவர் டாக்டர். Z. ஆனி விஜயா, இ.கா.ப. அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள்* ஆகியோரின் மேற்பார்வையில் மாவட்டத்தின் 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், 3,967 தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். மேலும், 423 தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!