தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு இன்று (09.11.2025) நடைபெற உள்ள நிலையில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு
காவல்துறை துணைத் தலைவர் டாக்டர். Z. ஆனி விஜயா, இ.கா.ப., அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் அறிவுரைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள். சரவணன் (தலைமையிடம்), குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்), .ஜாபர் சித்திக் (அரக்கோணம் உட்கோட்டம்), இராமச்சந்திரன் (DCRB), வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக