நிலவன் டிவியின் நிறுவனத் தலைவர்.மு. பிரகாசம் அவர்களின் தந்தையின் 16ஆம் நாள் நினைவு தினம் அனுசரிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் நிலவன் டிவியின் நிறுவனத் தலைவர் மு. பிரகாசம் அவர்களின் தந்தை முத்துகிருஷ்ணன் (எ) ராஜா அவர்கள் சென்ற மாதம் அக்டோபர். 26/10/25ஆம் தேதி இயற்கை எய்தினார். 09/11/25 நேற்று அவர்களின் 16ஆம் நாள் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த அமரர். முத்துகிருஷ்ணன்(எ) ராஜா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரர். நடராஜன் அவர்கள் குத்துவிளக்கேற்றி மலர் தூவி அவரது திருவுருவப்படத்தை திறந்து வைத்தார்.
இதில் நிலவன் டிவியின் நிறுவனத் தலைவரின் மனைவி சாவித்திரி பிரகாசம், தாயார். ராணி முத்துகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன்(எ) ராஜா அவர்களின் மகள். தமிழரசி காளிதாஸ், இளைய மகன். நெமிலி ஒன்றிய தேமுதிக துணை செயலாளர். பாலகுரு, சுஜாதா பாலகுரு, நாதன் ஒளி, நிலவன் நியூஸ் தினசரி நாளிதழின் வெளியீட்டாளர். உதயகுமார் மனோகரன், தாயார். பிரியா மனோகரன்,
நிலவன் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர். சந்தியா மணிகண்டன் நெமிலி ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர். உமா அண்ணாமலை, திமுக கழக நிர்வாகிகள். ஆர். காளிதாஸ் மயில்வேல், அமுது,விஜயபாஸ்கர்,வாசுகி முனுசாமி, இந்து மதி, கார்த்திகா, கோசன் ராஜா, முகுந்தன், பிரீத்தி,ராணிப்பேட்டை மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட துணை செயலாளர். செல்வா, கோடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் (அதிமுக) அனுசியா சுப்ரமணி, நிலவன் டிவி நிருபர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஆரணி ரோஜா நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெற்றது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக