அன்னியூர் கிராமத்தில் ரமணந்தாங்கள் ஏரிக்கரையில் 150 மரக்கன்றுகள் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா குமரன் தலைமையில் நடும் நிகழ்வு!!
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி வட்டம், அன்னியூர் கிராமத்தில் உள்ள ரமணந்தாங்கள் ஏரிக்கரையில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஷேக் அப்துல் ரகுமான் IAS அவர்களின் ஆணைக்கிணங்க, கூடுதல் ஆட்சியர். பத்மஜா ஆலோசனையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரையின் பெயரில், அன்னியூர் ஏரிக்கரையை பலப்படுத்தும் நோக்கில் மரம் வளர்ப்போம் - மழை பெறுவோம் எனும் உன்னத நோக்கில் 150 மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர். பிரேமா குமரன் தலைமையின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற செயலாளர். செந்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். அதனை தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் அன்னியூர் கிராம பொதுமக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக