கலெக்டர் தலைமையில் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த 14 வது ஹாக்கி உலக கோப்பை!!

தேனி மாவட்டம்,தேனி மாவட்டத்திற்கு வருகைதந்த 14-ஆவது ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையினை மாவட்ட விளையாட்டு மைதான புதிய உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மரு.பி.சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர். தங்கதமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வரவேற்று, உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பையினை காட்சிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள், விளையாட்டு விடுதி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் வரவேற்பு நடனம், சிலம்பம் மற்றும் கலைநிகழ்ச்சிகள், நடத்தப்பட்டது

பின்னர் விளையாட்டு மைதானத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை பொதுமக்கள் பார்வைக்காக வெற்றி கோப்பையானது ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  அபிதா ஹனீப், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், ஹாக்கி விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் சங்கிலி காளை மற்றும் பயிற்றுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!