சின்னமனூர்: அய்யம்பட்டி ஊராட்சியில் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை முன்னாள் முதலமைச்சர். பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ஊராட்சியில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கன்வாடி மையத்தினை திறக்க வருகை தந்த ஓபிஎஸ் அவர்களை குழந்தைகள் வரிசையாக நின்று வரவேற்றனர்.பின்னர் புது கட்டடத்தினை பார்வையிட்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்
பின்னர் அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் ...
தேனி மாவட்ட செய்தியாளர் ஜீவா.

கருத்துகள்
கருத்துரையிடுக