போடிநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள விபத்து தடுப்புகள், நாற்காலி, பேன் போன்ற உபகரணங்கள் வழங்கிய கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிமிடெட்!!
தேனி மாவட்டம்,கிரெடிட் ஆக்சஸ் இன்டியா பவுன்டேசன் மற்றும் கிராமின் கூட்டா போடிநாயக்கனூர் கிளை சார்பாக மதுரை கோட்ட மேலாளர். ஸ்ரீநிவாச ஆஞ்சநேய ரெட்டி அவர்களின் ஒப்புதலின்படி போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்திற்கு ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள விபத்து தடுப்புகள், நாற்காலி, நீண்ட இருக்கை, பீரோ, ஸ்டில் ரேக் மற்றும் மின்விசிறி போன்ற உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர். சுப்புலட்சுமி, மற்றும் காவல் உதவி ஆய்வாளர். விஜய் மற்றும் கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக திண்டுக்கல் மண்டல மேலாளர். சிவராஜ் தேனி பகுதி, வட்டார மேலாளர். மனேக்குமார், பால முருகன் மற்றும் கிளை மேலாளர்கள். அபிஷேக்,சரவணன், பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனி செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக