தட்டுப்பாடு இல்லாத மின்சாரம் தாருங்கள்!அரக்கோணம் சு. ரவி MLA கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் தினந்தோறும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது இதனால் சீரான மின்சார வாழ வேண்டும் என தமிழக அரசிற்கு சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது. வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக அரக்கோணம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தினந்தோறும் 5 மணி நேரங்களுக்கு மேலாக மின் வெட்டு ஏற்பட்டு மக்களை பெரும் துன்பங்களுக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மிகவும் பழமையான ஆயிரம் கணக்கிலான இன்சிலேட்டர்கள் (டிரான்ஸ்பார்மர்கள்) இருந்து வருகிறது. ஆகவே அவைகளை உடனடியாக போர்கால அடிப்படையில் அகற்றி நவீன பாலிமர் இன்சிலேட்டர்களை (டிரான்ஸ்பார்மர்கள்)
பொருத்தி தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் அதிமுக ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் கொடுத்தது போல் தர வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறோம் மேலும் ஆங்காங்கே பழுதடைந்த மின் கம்பங்களையும் மாற்றி தர வேண்டும் களப்பணிகளுக்கு அதிக ஆட்களையும் நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு எம்.எல்.ஏ. சு.ரவி கூறினார்.இந்தநிகழ்வில் பாண்டுரங்கன், பிரகாஷ், நரசிம்மன் மற்றும் டில்லிபாபு உடனிருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக