கவுன்சிலிங் முறையில் காவலர்கள் பணியிட மாற்றம் ஜெயக்குமார் IPS உத்தரவு!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள்  தலைமையில்,பணி மாறுதல் குழுவினர் முன்னிலையில் கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமல்பிரிவில் ஓராண்டு காலம் பணி முடித்த காவலர்களுக்கும், மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரிய விருப்பமுள்ள காவலர்களின்   பணியிட மாற்றம் வழங்குவது சம்பந்தமாக  26.10.2025 தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஒவ்வொரு காவலர்களிடமும் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்களை கேட்டு அறிந்து கவுன்சிலிங் முறையில் 53  காவலர்களை மதுவிலக்கு அமல் பிரிவிற்கும், மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய 56 காவலர்களை காவல் நிலையத்திற்கு 

பணியிட மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS  அவர்கள் ஆணை பிறப்பித்தார். இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.N. கோடீஸ்வரன்,  ரகுபதி, துணைக் காவல் கண்காணிப்பாளர்கள். ரூபன்குமார்,  அப்பாண்டைராஜ், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர். வேல்முருகன், ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!