அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தேர்வான பெண் காவலரைபாராட்டிய ஜெயக்குமார் IPS!!

கடலூர்மாவட்டம்,தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன்  சார்பில் 50-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 2025, சென்னை குருநானக் கல்லூரியில் சராஹரி சூட்டிங் அகாடமில் 6.9.2025 முதல் 14.9.2025 வரை நடைபெற்றது.  தமிழ்நாடு காவல்துறை விளையாட்டு ஆணையம் மூலம் கடலூர் மாவட்டம், நெய்வேலி தெர்மல் காவல் நிலையம் பெண் தலைமை காவலர். ராஜேஸ்வரி அவர்கள் 50 மீட்டர் பீப்சைட் ரைபிள் பிரிவில் பங்குபெற்று  2 தங்க பதக்கங்கள் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று தேசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S.  ஜெயக்குமார் IPS அவர்கள் பதக்கம் மற்றும்  அகில இந்திய  துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தேர்வான  பெண் காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!