கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை துவக்கி வைத்த ஜெயக்குமார் IPS!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 4.10.2025  தேதி S.R.J காவலர் நல திருமண மண்டபத்தில் இரத்ததான  முகாமை  கடலூர்மாவட்டகாவல்கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள் தொடங்கி வைத்து, ரத்ததானம் வழங்கினார். 

முன்னதாக பேசுகையில், உயிர் காக்கும் வாய்ப்பு  அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை.  உறுப்பு தானம் போன்றதுதான் நம் உடலில் இருக்கக்கூடிய இரத்தத்தை தானம் செய்வது. இரத்தம் வழங்குவதால் எந்த இழப்பும் ஏற்படாது. இந்த ரத்ததானம் வழங்குவதில் நமது கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் முன்னோடியாக விளங்குகிறார்கள். அதற்கு பெருமைப்பட வேண்டும். நான்  இதுவரை 8 முறை ரத்ததானம் வழங்கி இருக்கிறேன் என பேசினார். 

நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டைராஜ், மாவட்ட சுகாதாரம் அலுவலகம் மேற்பார்வையாளர். கதிரவன், மாவட்ட குருதி பரிமாற்ற குழு அலுவலர் டாக்டர். ஶ்ரீதரன் மற்றும் மருத்துவ குழுவினர், காவல்துறையினர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!