வாகன விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி (காசோலை) வழங்கிய ஜெயக்குமார் IPS!!

கடலூர் மாவட்டம், கடலூர், செல்லங்குப்பம் பன்னீர்செல்வம் மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து  தமிழ்நாடு சிறப்பு காவல் படை உளுந்தூர்பேட்டையில் காவலராக பணியாற்றி வந்தவர்,  அரியலூர் அருகே வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் கஜா  பாரத ஸ்டேட் வங்கியில் போலீஸ் சேலரி பேக்கேஜ் (PSP) அக்கவுண்ட் வைத்திருந்ததார். போலீஸ் சேலரி பேக்கேஜ் வைத்திருக்கும் காவலர்  விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி  இன்சூரன்ஸ் தொகை அவரது குடும்பத்தாருக்கு வழங்கி வருகிறார்கள். வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழந்த கஜா அவரது தந்தை பன்னீர்செல்வம், அவரது மனைவி பிரவீனா வயது 28, மகன் அதியன் வயது 2 1/2  குடும்பத்தாரிடம் ரூபாய் 1 கோடி  காசோலையை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் வழங்கினார். பாரத ஸ்டேட் வங்கி வங்கியின் மண்டல மேலாளர். நட்ராஜ் ,  தலைமை மேலாளர். பரணிதரன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!