பண்ருட்டி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS!!
கடலூர் மாவட்டம்,இன்று பண்ருட்டி நகரத்திற்கு நகராட்சி நிர்வாக இயக்குனர். ப.மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ் அவர்களும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களும் நகராட்சி திட்டங்களில் ஆய்வு செய்ய பண்ருட்டிக்கு வருகை தந்து பண்ருட்டி பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொண்டார்கள் அப்போது பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் சிறப்பு தலைவர். சேகர் அவர்களின் ஆலோசனைப்படி ஆலோசகர். கே.பி. வேலுமணி, செயலாளர். ஷேக் நூர்தீன் அவர்கள் நகராட்சி நிர்வாக இயக்குனரையும் மாவட்ட ஆட்சியர் அவர்களையும் சந்தித்து பண்ருட்டி பஸ் நிலையம் கட்டிட வேலைகளை விரைவாக முடிக்கவும் பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்க்கெட் விரிவாக்கம் பணிகளை விரைவாக துவங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்கனவே பல கோரிக்கைகளை பொது நல அமைப்பு சார்பில் வழங்கப்பட்டுள்ளது அந்த கோரிக்கைகளையும் அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அவரிடம் வழங்கப்பட்டது அதைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக