DSP அலுவலகத்திற்கு அலமாரி உடன் புத்தகங்கள் நன்கொடை!வெங்கட்டரமணன் பிரபாகரன் வழங்கினர்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் .ஜாபர் சித்திக் கேட்டுக் கொண்டபடி,
D S P அலுவலக வளாகத்தில் நூலகம் அமைப்பதற்காக, ரூபாய் முப்பதாயிரம் பெறுமானமுள்ள (நான்கு அறைகள் கொண்ட ) மரத்தால் ஆன செல்புடன்,₹.5 ஆயிரம் பெறுமானமுள்ள புத்தகங்கள் , கௌரவஆலோசகர்.இரா.வெங்கட்டரமணன் அவர்கள் , நன் கொடையாக வழங்கவும் சங்கத்தின் செயலாளர் . கோ.சுந்தரராஜ் அவர்கள் ₹.1000/- பெறுமானம் உள்ள 15-புத்தகங்களையும் வழங்க, சங்கத்தின் தலைவர் கவிஞர். சீ. மோகன் அவர்கள்,
₹.5000/- பெறுமானம் உள்ள சுமார் - 100 - புத்தகங்களும் வழங்கபட்டது இந்த நிகழ்ச்சிக்கு,D S P -அலுவலகம் சென்று , ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர் மணி அவர்கள் முன்னிலையில், தலைவர் கவிஞர்.சீ.மோகன்தலைமையில்,இரா.வெங்கட்டரமணன்அவர்களும்,கே.பிரபாகரன்அவர்களும்வழங்கினார்கள்.மேற்கொண்டு இன்னும் சில நூறு நூல்களை வாங்கித் தருவதாகவும் தெரிவித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக