புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவலர் தலைமை அலுவலகத்தில்(DGP Office) உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் சந்தித்து பேச்சு!!

புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு, போதை பொருள் பழக்கம் மற்றும் சைபர் க்ரைம் குற்றங்களில் காவல்துறை எப்படி செயல்படுகிறது என காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

முதல் தகவல் அறிக்கை புதுச்சேரி காரைக்காலில் தமிழிலும், ஏனாமில் தெலுங்கிலும், மாகேவில் மலையாளத்திலும் இருக்க வேண்டும் உத்தரவிடப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய சட்டங்களை காவல்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே 31% குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 100% குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து காவல் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கலால்துறை அனுமதி மீறி திறந்திருக்கும் ரெஸ்டோபார்கள் மீது வழக்குபதிந்து கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!