சோளிங்கர்: ஆஞ்சநேயர் மலை கோவில் கோபுரம் சாயும் நிலையில்! அபாயம் !!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 1330 படி கொண்ட யோக லட்சுமி நரசிம்ம சாமி மலைக் கோவிலும் ,300 படிகள் கொண்ட யோக ஆஞ்சநேயர் மலைக்கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளி மாநிலம், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். பக்தர்கள் வசதிக்காக பெரிய மலைக்கு செல்வதற்குரோப்கார்அமைக்கப்பட்டுள்ளது.சின்னமலை யோக லட்சுமி ஆஞ்சநேயர் மலைக்கு 300 படிகள் கொண்ட மலை என்பதால் ரோப் ஃபார் அமைக்கப்படவில்லை.
ஆஞ்சநேயர் சின்னமலைக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு தமிழக அரசு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.எந்த நிலையில் இரவு பொழிந்த மழையால்!மலையின் கோபுரத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சுற்று சுவர் கோபுரத்தை தாங்கி இருந்ததினால் இதுவரையில் எந்த அச்சமும் ஏற்படாத நிலையில் பக்தர்கள் இருந்தார்கள்.தற்பொழுது கோபுரத்தை ஒட்டியுள்ள சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததால் கோபுரமும் சரிந்து விழுந்து விடுமோ என பக்தர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற மலைக்கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருந்தால் அந்தஇடம் கண்டதும் பொது மக்களுக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.





கருத்துகள்
கருத்துரையிடுக