நெமிலி அருகே வேட்டாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்! ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு பங்கேற்பு!!

இராணிப் பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றியம்,பள்ளிக்கல்வித்துறை சார்பில், வேட்டாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற,2025 - 2026 ஆம் ஆண்டிற்கான,”நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்” பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற, நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், பள்ளியின் தலைமை ஆசிரியர். சரளாதேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதுகலை ஆசிரியர். ஜெயவேலு வரவேற்றார். இந்த சிறப்பு முகாம் கடந்த 26.9.2025 முதல் 2.10.2025 வரை ஒரு வாரம், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்ளடக்கி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, வேட்டாங்குளம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, நெமிலி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பொதுஇடங்களை சுத்தம் செய்து தூய்மைப்படுத்தினர். மேலும் சமுதாய முன்னேற்றத்திற்காக பல்வேறு தலைப்புகளில் செயலாற்றி சேவைப் பணிகளை மேற்கொண்டனர். அவர்களை பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக, இந்த சிறப்பு முகாமிற்கான நிறைவு விழா, இன்று (அக்டோபர்-2), வேட்டாங்குளம் அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது!..“நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் அயராது பாடுபட்ட, அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்த தினமான இன்று, நமது பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின், நிறைவு விழா நடைபெறுவது சிறப்புக்குரியது. மேலும் மாணவச் செல்வங்களின் அழியாச் செல்வமாக விளங்கக்கூடிய கல்வியோடு, சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளையும் உடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவச் செல்வங்கலாகிய நீங்கள், கடந்த ஒரு வார காலத்தில் ஒவ்வொரு தினமும், “பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பெண்கல்வியை ஊக்குவித்தல்” போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது!. மேலும் நீங்கள் நல்ல ஊக்கமும், ஆக்கமும் பெற்று, கல்வியில் சிறந்த மாணவர்களாகவும்,தனிமனித ஒழுக்கங்களை கடைபிடிப்பவர்களாகவும், சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடககூடியவர்காளகவும் விளங்கிட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் IAS, IPS போன்ற நீங்கள் விரும்பும் துறைகளில், நன்கு கற்று தேர்ந்து சிறப்புக்குரியவர்களாக விளங்கிட வேண்டும். நீங்கள் பயிலும் இப்பள்ளிக்கும், உங்களது ஆசிரியர்களுக்கும், உங்களது பெற்றோர்களுக்கும், நம்முடைய பகுதிக்கும், பெருமை சேர்க்கும் விதமாக நீங்கள் உருவாக்கிட வேண்டும். என்று தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மாணவர்களிடையே தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கு, பாராட்டு சான்றிதழையும், பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர். வேதையா, லயன். ராஜமாணிக்கம், லயன். கிருஷ்ணன், லயன்.அசோகன், முன்னாள் ஆசிரியர். வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டு,வாழ்த்துரைவழங்கினர்.இறுதியாக, முதுகலை ஆசிரியர். விநாயகமூர்த்தி அவர்கள் நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!