ஓடையில் மிதந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!தீயணைப்பு படையினர் மீட்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த சாராஞ்சி கிராமம் உள்ளது. சோளிங்கர் நந்தி ஆற்று நீர் . வெங்குபட்டு. பாராஞ்சி. மின்னல். வழியாக கல்லாற்றில் கலக்கிறது. இந்த நீர்வரத்து கால்வாய் பாராஞ்சி கிராமம் அருகே செல்கின்றது இந்த நிலையில நேற்று முன்தினம் காலை ஆண் சடலம் நீரில் மிதப்பதாக சோளிங்கர் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஓடையில் மிதந்து கொண்டிருந்த குமார் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆன்சடலம் மிதப்பதை கண்ட தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர் யார் எந்த ஊர் என்ன பெயர் என்பது சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக