அரக்கோணம் மாரத்தான் ஓட்டம் நகர கமிஷனர் துவக்கி வைத்தார்!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் மாரத்தான் ஓட்டம் அதிகாலை நடைபெற்றது.விடியல் அறக்கட்டளை மற்றும் அவர் அறக்கட்டளை இணைந்து நடத்திய மரத்தான் ஓட்டத்தினை அரக்கோணம் நகராட்சி கமிஷனர். ஆனந்தன் தொடங்கி வைத்தார். 

அரக்கோணம்  மார்க்கெட் எதிரே துவங்கிய மாரத்தான்  ஓட்டத்தில் 25 பெண்கள் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர் துவக்க நிகழ்ச்சியில் காவல் துறை ஆய்வாளர். சிவகுமார் அம்பாரி வித்யாஷ்ரம் பள்ளி செயலாளர். செந்தில்குமார் டாக்டர் அபிஷேக் நகர மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் மாரத்தான் ஓட்டம் மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், சுவால் பேட்டை, தாலுக்கா ஆபீஸ், நகராட்சி ஆபீஸ், இந்திரா காந்தி சிலை, வழியாக கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நிறைவடைந்தது அங்கு கல்லூரி செயலாளர். ரவிக்குமார் தலைமையில் பரிசளிப்பு நடைபெற்றது. முதல் பரிசினை வழக்கறிஞர் பத்மநாபன் வழங்கினார். முதல் பரிசினை லோகநாதன் இரண்டாம் பரிசினை சுகுமார் மூன்றாம் பரிசினை தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டனர். இதுபோல் பெண்கள் பிரிவில் பிரியதர்ஷினி முதல் இடத்திலும் கவிதா சூர்யா இரண்டு மூன்று பரிசுகளை பெற்றனர்.அனிபா நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!