தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் அமைச்சர்.கே. என்.நேரு பங்கேற்பு!!

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிருவாக இயக்குனரகத்தில்,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர். கே. என். நேரு அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தின் போது, வடகிழக்கு பருவ மழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவான ஆய்வு மேற்கொண்டேன் . மேலும், குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

 இந்த ஆய்வுக் கூட்டத்தில்,  அரசு முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முனைவர். தா. கார்த்திகேயன் இ.ஆ.ப., அரசு சிறப்பு செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. சு. கணேஷ் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக துறை இயக்குனர். ப. மதுசூதன்ரெட்டி இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர். ஜி. எஸ். சமீரன் இ.ஆ.ப., பேரூராட்சிகளின் இயக்குனர். மா. பிரதீப்குமார் இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர். ஆனந்த் மோகன் இ.ஆ.ப., ஆகியோருடன் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!