தமிழ்நாடு பெளத்தர்கள் பேரவை சார்பில் பெளத்தம் எழுகிறது தீட்சாபூமி சிறப்பு சிறப்பு மலர் வெளியீடு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு பெளத்தர்கள் சங்கப்பேரவை- மற்றும் பெளத்த இயக்க அறக்கட்டளை, சார்பில் பெளத்தம் எழுகிறது-தீட்சாபூமி சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.  பேரவை பொருளாளர். கோவி.பார்த்திபன் வரவேற்றார். ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர். க.கெளதம் தலைமை தாங்கினார். ஆதிபகவன் புத்தர் அறிவாலய நிறுவனர். மகாதினகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியில் பெளத்தம் எழுகிறது, தீட்சாபூமி சிறப்பு மலரை நாக்பூர் -தி கிரேட் அசோகா பவுண்டேசன் தலைவர். ஜிட்டு பன்சாட் வெளியிட விசிக வழக்கறிஞரணி மாநில செயலாளர். த.பார்வேந்தன், சி.எஸ்.ஐ. சென்னைப் பேராயம்-தலித் மற்றும் ஆதிவாசி  வாரிய இயக்குனர். எஸ்.ஜெபராஜன், இணை இயக்குனர் . சுனில் லிவிங்ஸ்டன் ஆகியோர் மலரை பெற்று கொண்டனர்.  தமிழ்நாடு பெளத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கெளதம சன்னா மற்றும் ஜெர்மனியிலிருந்தும் மலரை வாழ்த்திப் பேசினர் முன்னதாக பாவலர் முகில் கலைக்குழு, காஞ்சி மக்கள் மன்றம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இறுதியாக பெளத்தம் எழுகிறது ஆசிரியர் குழு பொறுப்பாளர் கவிஞர். மு.இஸ்மாயில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!